தமிழ்நாடு

`சரக்கு பிரிப்பதில் சண்டை' ஷேரிங் செய்தவருக்கு நடந்த விபரீதம்

தந்தி டிவி

ஆந்திராவை சேர்ந்தவர் தர்மராஜ். சென்னை காசிமேட்டில் மீன் பிடி தொழில் செய்து வந்த இவர், கடந்த 3 ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில், பின் கரைக்கு திரும்பவில்லை. இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், தர்மராஜ் சடலமாக கரை ஒதுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. கடலில் இருந்து திரும்பி வரும் போது, சக மீனவரான பைபில் உமா மகேஸ்வரர் என்பவருடன் தர்மராஜ் மது அருந்தியிருக்கிறார். அப்போது, மதுவை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், தர்மராஜை கழுத்தை நெரித்தும், தலையில் கல்லால் அடித்தும் கொன்ற உமா மகேஸ்வர, உடலை கடலில் வீசியதும் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், உமா மகேஸ்வரரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்