ஓசூரில் கண்ணன் என்ற வழக்கறிஞர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் நீதிமன்றங்கள் வாயிலில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்
சார்பில் கண்ணன் மீதான தாக்குதலை கண்டித்து, எழும்பூர் நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கண்ணனை தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.