தமிழ்நாடு

பாம்புகள் மிதந்த கழிவறை.. அலறிய மாணவிகள்.. தந்தி செய்தி எதிரொலி.. அடியோடு மாறிய கல்லூரி வளாகம்

தந்தி டிவி

செய்யாறு அரசு பெண்கள் கல்லூரி கழிப்பறைக்குள் பாம்புகள் கூட்டமாக உலா வந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, கழிவறையை சுற்றி உள்ள புதர்கள் வேகமாக அகற்றப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் முதல்வர் அறை அருகே மாணவிகள் கழிப்பறை உள்ளது. இந்த கழிவறையை சுற்றி செடி, கொடிகள் அடர்ந்து புதர் மண்டி காணப்பட்டதுடன், கழிவறைகளும் சுகாதாரமின்றி இருந்தன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள கழிவறைக்குள் 30-க்குள் மேற்பட்ட பாம்பு குட்டிகள் உயிருடன் மிதந்து கொண்டிருந்தன. இதனை பார்த்து அலறி அடித்தபடி மாணவிகள் வெளியே ஓடி வந்தநிலையில், ஒரு மாணவி அதனை செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டார். இந்த வீடியோ தந்தி தொலைக்காட்சியில் செய்தியாக வெளியானது. இதையடுத்து, இன்று கல்லூரி வளாகம் ஜேசிபி எந்திரம் மூலம் அவசர அவசரமாக சுத்தம் செய்யப்பட்டது. தந்தி டிவி செய்தி எதிரொலியால் கல்லூரி வளாகம் சுத்தம் செய்யப்பட்டதால் மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை