தமிழ்நாடு

Elephant | Erode | Drone | தந்தி டிவி எதிரொலி - தாயை பிரிந்த குட்டி யானை ட்ரோன் மூலம் கண்காணிப்பு

தந்தி டிவி எதிரொலி - தாயை பிரிந்த குட்டி யானை ட்ரோன் மூலம் கண்காணிப்பு

thanthitv

Elephant | Erode | Drone | தந்தி டிவி எதிரொலி - தாயை பிரிந்த குட்டி யானை ட்ரோன் மூலம் கண்காணிப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், தண்ணீர் தேடி வந்த பிறந்து சில மாதங்களே ஆன குட்டி யானை ஒன்று தாயைப் பிரிந்து காக்காயனூர் வனப்பகுதியில் அங்கும் இங்குமாகத் தனித்துத் தவித்து வருவது குறித்த செய்தி தந்தி டிவியில் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, அந்தியூர் வனச் சரக அலுவலர் நந்தினி தலைமையிலான வனத்துறையினர் உடனடியாக அப்பகுதியில் ரோந்துப் பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வரட்டுப்பள்ளம் அணைக்குத் தண்ணீர் குடிக்க வந்தபோது வழி தவறியிருக்கலாம் என்றும், சுமார் இரண்டு வயதுடைய இந்த யானைக் குட்டி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தாயைப் பிரிந்து தவிக்கும் இந்தக் குட்டி யானையைத் தாய் யானையுடன் சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதோடு, குட்டி யானையின் பாதுகாப்பிற்காக ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் வனத்துறையினர் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Assembly Visit | பேரவையை நேரில் விசிட் அடித்த மக்கள் | 28 நாளில் இதுவரை இல்லாத உச்சம்..

By Election | ECI | Full கன்ட்ரோல் எடுத்த ECI.. களமிறங்கிய டீம்.. அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி

CM Vijay | TVK | TN Govt | அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு CM விஜய் ஸ்ட்ரிக்ட் உத்தரவு

Thiruttani | காலை அனுமதி மதியம் தடை.. திருத்தணி கோயிலில் மீண்டும் அமல்

TN Byelection 2026| இடைத்தேர்தல்நடக்கும் தொகுதியில் நொடிக்குநொடி அதிரடி