உணவுப் பொருட்களை பதப்படுத்த, புதிய அறிவியல் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் உதவி தலைவராக பொறுப்பேற்றுள்ள அவர், தஞ்சையில் மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் பயிற்சி நிறுவனத்தின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைக் கூறினார்.