தமிழ்நாடு

நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழு அதிகாரிகள் ஆய்வு - விவசாயிகள் கோரிக்கை | Thanjavur

தந்தி டிவி

                                         நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழு அதிகாரிகள் ஆய்வு - விவசாயிகள் கோரிக்கை | Thanjavur

• நெல்லின் ஈரப்பதம்17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உடனடியாக உயர்த்த வேண்டும் என, மத்திய குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக, டெல்டா விவசாயிகள் தெரிவித்துள்ளனர். • தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில், அண்மையில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. • தொடர்ந்து, தற்போது வானம் மேகமூட்டம் மற்றும் தொடர் பனிப்பொழிவு காரணமாக அறுவடை நெல்லை உலர வைப்பதில் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். • எனவே நேரடி தெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். • இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இதையடுத்து மத்திய குழுவினர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள கக்கரை, புலவன்காடு, தெலுங்கன் குடிக்காடு, புதூர் ஆகிய நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர். • பின்னர் நெல் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றதோடு, விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டு தெரிந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்