தஞ்சை மாவட்டத்தில் பராமரிப்பு இன்றி காணப்படும் பழமையான சிவ ஆலயத்தை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டுக்கோட்டையை அடுத்த அத்திவெட்டி கிராமத்தில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான சௌந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்களின் வழிபாட்டில் இருந்து வந்த இக்கோயில், தற்போது அறநிலைய துறையின் கீழ் உள்ளது. இந்நிலையில் உரிய பராமரிப்பு இல்லாததால் ஆலய கோபுர கலசங்கள், கல்வெட்டுகள், சுற்றுச்சுவர், கோயில் குளம் உள்ளிட்டவை சிதலமடைந்து காணப்படுகிறது. இதனையடுத்து ஆலயத்தை சீரமைத்து, மக்கள் வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொல்லியல் துறையினருக்கு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.