தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மமல்லபுரம் ஊராட்சிமன்ற தலைவர் ரமேஷ் என்பவர், தனது சொந்த செலவில், ஆயிரம் வீடுகளுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினார். அதிகாலையில் நிவாரண பொருட்களை வீடுதோறும் சென்று வழங்கியதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.