தமிழ்நாடு

`பீர் பாட்டில், கத்தி'... நடுங்க வைத்த பெண்ணின் அலறல்...சிறுவனுக்கு விருந்தாக்கிய சைக்கோ தோழன்

தந்தி டிவி

தஞ்சாவூர் அருகே, தன் நண்பர்களுடன் சேர்ந்து தோழியை கடத்திச் சென்று இளைஞர் அரங்கேற்றி இருக்கும் கொடூரம் ஒரு கிராமத்தையே உலுக்கி இருக்கிறது.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவர் விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பி இருக்கிறார்...

இந்நிலையில், நேரில் சந்தித்து நீண்ட நாள் ஆகி விட்டதாக கூறி பெண்ணை அழைத்திருக்கிறார் அவரின் நண்பர்...

நண்பர்களுடன் சேர்ந்து பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

இரவு நேரம் என்பதால் சற்று தயங்கிய அப்பெண், வீட்டருகே தானே என்ற தைரியத்தில்... அருகில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று இளைஞரை சந்தித்திருக்கிறார்...

அங்கு 17 வயது சிறுவன் உட்பட தன் நண்பர்கள் மூவரை ஏற்கனவே திட்டமிட்டு பதுங்கி இருக்கச் செய்திருக்கிறார் இளைஞர்.. அப்போது அங்கே பதுங்கி இருந்த மூவரும் திடீரென பீர் பாட்டிலுடனும், கத்தியுடனும் வெளியில் வந்து பெண்ணை மிரட்டி இருக்கின்றனர்...

தொடர்ந்து மூவரின் உதவியுடனும் அருகில் உள்ள விவசாய நிலத்தின் கொட்டகைக்கு பெண்ணை கடத்திச் சென்ற அவரின் நண்பர், கொட்டகைக்குள் வைத்து தன் நண்பர்களுடன் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

பெண்ணின் தோழனுடன் சேர்ந்து 17 வயது சிறுவன் உட்பட நால்வர் கைது

சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது எனக்கூறி நடந்ததை செல்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டு பெண்னை விரட்டி இருக்கிறார் அந்த இளைஞர்...

தீரா மன வலியுடன் வீட்டிற்கு வந்த அப்பெண், தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் தெரிவித்து போலீசில் புகாரும் அளித்திருக்கிறார்...

இந்த பரபரப்பு விவகாரத்தில், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரே வழக்கு விசாரணையில் நேரடியாக களமிறங்கிய நிலையில், பெண்ணின் தோழனான கவிதாசனுடன் சேர்ந்து... பிரவீன், திவாகர் மற்றும் 17 வயது சிறுவன் என நால்வரையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர்...

நால்வரிடமும் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய இளம் பெண்ணுக்கு, அவரது நண்பனால் நேர்ந்த துயரம் தஞ்சையை பரபரக்க வைத்திருக்கிறது..

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி