தமிழ்நாடு

தஞ்சை அரசு மருத்துவமனை பாதுகாவலராக, திருநங்கைகள் நியமனம்

தஞ்சை அரசு மருத்துவமனையில், முதல் முறையாக, 8 திருநங்கைகள் பாதுகாவலராக, பணி நியமனம் செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு,

திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 24 மணி நேரமும் இந்த மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு பணியில் தனியார் நிறுவன காவலாளிகள் அமர்த்தப்பட்டனர். இந்த நிலையில், மகப்பேறு வார்டில் முதன் முறையாக 8 திருநங்கைகள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் காவலாளியாக பணி வழங்கியது தங்களுக்கு பெருமையாக உள்ளதாக திருநங்கைகள் தெரிவித்தனர். இது போன்று, திருநங்கைகளுக்கு அனைத்து துறைகளிலும் பணி வழங்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்