தமிழ்நாடு

Thanjavur | Child Death | பூட்டிய காருக்குள் சிக்கி உயிரிழந்த சிறுவன்..தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

thanthitv

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூட்டிய காருக்குள் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கக்கரைக்கோட்டை வடக்கு நத்தம் பகுதியைச் சேர்ந்த தமன் என்ற சிறுவன், விடுமுறை நாளில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் ஏறியதாகக் கூறப்படுகிறது. அப்போது காரின் கதவுகள் தானாக பூட்டிக்கொண்டதால், வெளியே வர முடியாமல் சிறுவன் உள்ளேயே சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.சிறுவனை நீண்ட நேரமாக காணாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தீவிரமாக தேடிய நிலையில், இரவு காரை திறந்து பார்த்தபோது தமன் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.தகவலறிந்த ஒரத்தநாடு போலீசார் உடலை மீட்டதுடன், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்