தமிழ்நாடு

"23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா : விழாக்கோலத்தில் ஜொலிக்கும் தஞ்சை மாநகர்"

23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு கோவில் முழுமையாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு திருப்பணிகள் , கோபுர கலசங்கள் தங்க முலாம் பூசுதல், புதிய கொடிமரம் என கடந்த ஓராண்டாக பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது தஞ்சை பெருவுடையார் கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தஞ்சை ராஜ ராஜ சோழன் சிலை சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு அதற்கும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், மாவட்ட எஸ்பி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தஞ்சை நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்