தஞ்சாவூர் பெரியகோயில் யுனஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களின் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தஞ்சை பெரிய கோயிலை உலக அதிசய பட்டியலில் சேர்ப்பதற்காக சமூக ஆர்வலர்கள் இணைந்து குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த குழுவில் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன், ஓய்வு பெற்ற தலைமை செயலர், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடம்பெற்றுள்ளனர். உலக அதிசயமாக அறிவிக்க வலியுறுத்தி ஆதரவு திரட்ட முதல் கட்டமாக இணையத்தளத்தில் மூலம் வாக்கெடுப்பு நடத்த இந்த குழு திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் உலக அதிசய குழுவை கோயிலுக்கு அழைத்து வந்து பார்வையிட வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.