தமிழ்நாடு

பாதுகாப்பு வளையத்திற்குள் பெரிய கோயில் - 160 இடங்களில் கேமிரா பொருத்தி கண்காணிப்பு

வரலாற்று புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தந்தி டிவி

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் அடுத்த மாதம் 5ஆம் தேதி குடமுழுக்கு விழா பிரமாண்ட நடைபெற உள்ளது. இதை பார்க்க வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக காவல்துறை சார்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க, இரும்பினால் ஆன 13 தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 160 இடங்களில் கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இதற்காக பெரிய கோவில் எதிரே கட்டுப்பாட்டு அறையும் உருவாக்கப்பட்டுள்ளது. பெரிய கோவில் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிப்ரவரி 4, 5 ஆகிய இரு நாட்கள் போக்குவரத்து நிறுத்தப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்