ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் வேர்காடு மதநல்லிணக்க தூய சந்தியாகப்பர் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலயத்தில் இருந்து சந்தியாகப்பர் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை கிராம தலைவர்கள் எடுத்து வர, பங்குத்தந்தை புனித நீர் தெளித்து கொடி மரத்தில் ஏற்றினர். இதில் இந்துகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், என அனைத்து மதத்தினர் மற்றும் ஆன்மிக பெரியவர்கள் கலந்து கொண்டனர்.