இன்று காலை 5 மணி முதல் சிறப்பு ஹோமம், பூஜைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து வேளாக்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம், சிவபுரம் ஆதீனம், ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர், திருக்குறுங்குடி ஜீயர், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமணன், மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் கலந்துகொண்டு புனித நீராடினர்.