நெல்லை மாவட்டம் பணகுடி ராமலிங்கசுவாமி கோயிலில் தைப்பூசத்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவில் விநாயகர் தேரை சிறுவர்களும் சுவாமி அம்பாள் தேரை பெரியவர்களும் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் உலா வந்த தேரில் ராமலிங்கசுவாமி சமேத சிவகாமி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தில் பணகுடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.