தமிழ்நாடு

கள்ளக்காதலி வேறு ஒருவருடன் தொடர்பு : ஆத்திரமடைந்த காவலர் வெறிச்செயல்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பெண் ஒருவரை போலீஸ் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
தென்காசி மாவட்டம் தெற்கு கடையத்தை சேர்ந்த தம்பதி ஹரிராம் - முப்பிடாதி சக்தி. கடையம் காவல் நிலைய போலீஸ் தட்சிணாமூர்த்திக்கும் முப்பிடாதி சக்திக்கும், கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கணவர் ஹரிராம் மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்ர். இதனால், முப்பிடாதி சக்தி வீட்டுக்கு அடிக்கடி சென்ற காவலர் தட்சிணாமூர்த்தி, குடும்ப செலவுக்காக மாதந்தோறும் பணம் வழங்கியுள்ளார். இந்நிலையில் முப்பிடாதி சக்திக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த காவலர் தட்சிணாமூர்த்தி, தனது கள்ளக் காதலி முப்பிடாதி சக்தியை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் தட்சிணாமூர்த்தி, தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முப்பிடாதி சக்தியின் தலையில் குத்திவிட்டு தப்பி ஓடினார். பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள், முப்பிடாதி சக்தியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பிச்சென்ற காவலர் தட்சிணாமூர்த்தி கடையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி