தென்காசி மாவட்டம், கடையம் வன அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் வாகைகுளத்தை சேர்ந்த அனக்கரைமுத்து, தமது வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்தில் சட்ட விரோதமாக, மின் வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடையம் வன சரக அலுவலகத்தில் ஆஜரான அனக்கரை முத்துவுக்கு நெஞ்சு வலியால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், வனத்துறையினரின் தாக்குதலால் முத்து உயிரிழந்தாக குற்றம்சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.