தமிழ்நாடு

Tenkasi | Gold | வீட்டு வாசலில் இருந்த சாக்கு மூட்டை.. திறந்து பார்த்தால் ரூ.30 லட்சம் நகை

வீட்டு வாசலில் இருந்த சாக்கு மூட்டை.. திறந்து பார்த்தால் ரூ.30 லட்சம் நகை

thanthitv

வீட்டு வாசலில் இருந்த சாக்கு மூட்டை.. திறந்து பார்த்தால் ரூ.30 லட்சம் நகை - காலை எழுந்து பார்த்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி 26 சவரன் நகை, ரூ.7 லட்சம் திரும்ப கிடைத்ததால் பாதிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பாம்பு கோயில் சந்தை பகுதியில் நடந்த 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பூமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி, 26 பவுன் நகை மற்றும் 7 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தடயவியல் நிபுணர்களுடன் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை மாரியப்பன் வீட்டு வாசலில் சந்தேகத்திற்கிடமான சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அதை திறந்து பார்த்தபோது, கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணம் அனைத்தும் இருந்ததுள்ளது. போலீசுக்கு பயந்து கொள்ளையன் நகை பணத்தை வீட்டு வாசலிலேயே போட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சொக்கம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Vijay Income Tax Case | எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீட்டுக்கு சென்ற விஜய்

TN Election Police Protection | தமிழகம் முழுக்க ஒன்றரை லட்சம் போலீஸை இறக்க திட்டம்

TASMAC | Closed | தமிழகத்தில் இந்த 3 நாட்கள் டாஸ்மாக் மூடல்.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

CM சவாலை ஏற்று வெளியிட்டார் நிர்மலா சீதாராமன் - TN தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு

Vijay | TVK | மீண்டும் விஜய் - தவெக தொண்டர்களுக்கு மெகா செய்தி