தமிழ்நாடு

போலீசை பார்த்ததும் தெறித்து ஓட்டம்.. பிடித்து விசாரித்ததில் திடுக் வாக்குமூலம்.. சதி வேலை அம்பலம்.. தென்காசியில் பகீர்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீராணம் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளார்... சுரேஷ் என்ற அந்த நபரை மடக்கிப் பிடித்த போலீசார் பைக்கை சோதனை செய்த போது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளன. விசாரணை செய்ததில் சுரண்டையில் நாகராஜ் என்பவரிடமிருந்து வெடி மருந்துகள் வாங்கி 8 நாட்டு வெடி குண்டுகளாகத் தயார் செய்து, அதில் 2 குண்டுகளை மனோ சங்கர் என்பவரிடமும் ஒரு குண்டை கார்த்திக் என்பவருக்கும் கொடுத்து வைத்திருப்பதாகவும், 3 குண்டுகளைக் கடந்த 20ம் தேதி வீராணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்திற்குள் தானும் கார்த்திக் என்பவரும் சேர்ந்து வெடிக்க வைத்து பள்ளி சுவரைச் சேதப் படுத்தியதாகவும் கூறியுள்ளார்... இதையடுத்து போலீசார் சுரேஷ், கார்த்தில், மனோ சங்கர், நாகராஜா ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு