தமிழ்நாடு

Chennai || சென்னையில் வீட்டு உரிமையாளரிடம் நகையை பறித்த வாடகைதாரர்

சென்னையில் வீட்டு உரிமையாளரிடம் நகையை பறித்த வாடகைதாரர்

thanthitv

Chennai || சென்னையில் வீட்டு உரிமையாளரிடம் நகையை பறித்த வாடகைதாரர் சென்னை, அனகாபுத்தூர் பஜார் தெருவில் வசித்து வருபவர் வரலட்சுமி. 72 வயதான இவர், காலை நேரத்தில் வீட்டில் தனியாக இருந்தபோது, உள்ளே புகுந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஏற்கனவே தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபர் மீது சந்தேகம் இருப்பதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து, தாம்பரம் கடப்பேரியைச் சேர்ந்த சிவப்பிரகாசத்தை போலீசார் கைது செய்தனர். லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்த சிவபிரகாசம், மனைவி, குழந்தைகளுடன் வரலட்சுமி வீட்டில் வாடகைக்கு குடியிருந்துள்ளார். வேலை வாய்ப்பு சரியாக இல்லாததால் வாடகை கொடுக்க முடியாமல் வாடகை பாக்கிக்காக அட்வாண்ஸ் பணத்தை பிடித்துக்கொண்டு வரலட்சுமி வீட்டை காலி செய்ய வைத்துள்ளார். இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்த சிவப்பிரகாசம், பழிவாங்கும் நோக்கில் செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவர் நடைபயிற்சிக்குச் செல்லும் நேரத்தில் வரலட்சுமி தனியாக இருப்பதை அறிந்திருந்த சிவப்பிரகாசம், முகத்தில் பாலித்தீன் கவரை மூடிக்கொண்டு வீட்டிற்குள் புகுந்து கத்திமுனையில் செயினை பறித்துள்ளார். முகத்தை மறைத்திருந்தபோதும், உடல் அமைப்பை வைத்து கொள்ளையடித்தது தனது வீட்டில் குடியிருந்த சிவபிரகாசம்தான் என வரலட்சுமி அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து, சிவப்பிரகாசத்தை கைது செய்த போலீசார், பறிக்கப்பட்ட நகையை மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

High Court | Cattles | சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் - உயர்நீதிமன்றம் உத்தரவு

BREAKING || தி.மலை தீபம் கானவரும் பக்தர்களுக்கு நற்செய்தி - முதல்முறையாக இலவசம்

BREAKING || துரைமுருகன் மீதான பரபரப்பு புகார் - வெளியானது FIR

Dindigul | death பறிபோன 3 பிஞ்சு உயிர்கள் சோகத்தில் மூழ்கிய கிராமம்

Checkanurani | TN Police | செக்கானூரணி காவல் மரணம்.. 5 மணிநேரத்தை தாண்டி பரபரக்கும் விசாரணை