இது தொடர்பான வழக்கு, இன்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது,பெரிய கோயில்களில் உள்ள நிதியை கிராமப்புற கோயில்களுக்கு பயன்படுத்துவதில் என்ன பிரச்சனை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனால், கிராமப்புறங்களில் உள்ள கோயில்கள் வளர்ச்சி பெறும் எனவும் கருத்து தெரிவித்தனர்.
பெரிய கோவில்களில் இருந்து கிடைக்கப் பெறும் நிதியை தற்போதைக்கு செலவு செய்ய வேண்டாம் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள்,மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.