தமிழ்நாடு

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பு இல்லை? - தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பதில்லை என அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
நாளை முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து, கடந்த 3ஆம் தேதி தலைமை செயலகத்தில் சமய தலைவர்களுடன் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். சமய வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி பெற வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, நாளை தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்க இயலாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சமய வழிபாட்டுத் தலங்கள் திறப்பது குறித்து அதிகாரப்பூர்வமான முடிவை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்