கும்பகோணத்தில் பெண்கள் ஒன்றிணைந்து முன் நின்று, பெருமாள் கோவில் ஒன்றின் கும்பாபிஷேகத்தை நடத்தி உள்ளனர். கும்பகோணம் அருகே அண்ணல் அக்ரஹாரம் அரிய திடல் பகுதியில் உள்ள பெண்கள் ஒன்றிணைந்து, நிதி திரட்டி திருப்பணிகள் செய்து ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தினர். கும்பாபிஷேகத்திற்கு முன்னர் புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.