தமிழ்நாடு

கோயிலில் அன்னதானம் சாப்பிட்டு கை கழுவ சென்ற அக்கா, தங்கச்சி பரிதாப பலி

தந்தி டிவி

கன்னியாகுமரி அருகே கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி சகோதரிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சலிங்கபுரம் பகுதியில் உள்ள ராகவேந்திரா கோவிலுக்கு 14 மற்றும் 12 வயதுடைய சகோதரிகள், சாமி தரிசனம் செய்ய சென்றதாக கூறப்படுகிறது. கோவிலில் வழங்கிய அன்னதானத்தை சாப்பிட்டுவிட்டு தெப்பக்குளத்தில் கைகழுவ சென்றபோது, இருவரும் தவறி குளத்தில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்டநேரம் போராடி, சகோதரிகள் இருவரின் உடல்களையும் சடலமாக மீட்டனர். இருவரது உடல்களும் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Nana Patekar| இறக்கும் முன் நானா படேகர் அனுப்பிய `கடைசி’ மெசேஜ் - வெளியான திடுக் தகவல்

Chengalpattu | நாளை என்ன நாள்-னு ஞாபகம் இருக்கா? - செங்கல்பட்டில் குவிக்கப்பட்ட போலீஸ்

Farmers | CM Vijay | "விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை.." TN அரசு கொண்டாட்ட அறிவிப்பு

Supreme Court | Medicine மார்க்கெட்டிங்.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு

Madurai Meenakshi Temple Case | "தலையிட விரும்பவில்லை.." - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு