தமிழ்நாடு

தேஜஸ் ரயிலில் பயணிக்க எவ்வளவு கட்டணம்?

பிரதமர் மோடி தொடங்கி வைத்த தேஜஸ் அதி விரைவு சொகுசு ரயிலில் சர்வதேச தரத்திலான 22 சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

தந்தி டிவி

* சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில், கடந்த நவம்பர் மாதம் தயாரிக்கப்பட்ட தேஜஸ் அதிவிரைவு ரயிலில் மொத்தம் 15 பெட்டிகள் உள்ளன

* ஒவ்வொரு இருக்கையின் பின்புறம் சிறிய வீடியோ திரைகள், பொருத்தப்பட்டுள்ளன. தானியங்கி டீ,காபி இயந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

* ரயில் பெட்டியில் ஜி.பி.எஸ் வசதி, எல்.ஈ.டி விளக்குகள் வசதியுடன், உள் மற்றும் வெளி புறத்தில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

* இருக்கைகளின் கைப்பிடியில் மடக்கும் வசதி கொண்ட சிற்றுண்டி மேசைகள், செல்போன் சார்ஜர் வசதிகள் உள்ளன.

* கழிவறை கண்ணாடிகளில் தொடுதிறன் சுவிட்ச் கொண்ட எல்ஈடி விளக்கு உள்ளிட்ட 22 சிறப்பு அம்சங்கள் இந்த ரயிலில் இடம் பெற்றுள்ளன.

* வியாழக்கிழமை தவிர மற்ற ஆறு நாட்கள் இயக்கப்பட உள்ள தேஜஸ் ரயில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எனக் கூறப்படுகிறது.

* இதனால் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு ஆறரை மணி நேரத்தில் செல்ல முடியும் என தெரிகிறது.

* அமரும் வசதி கொண்ட குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்த 895 ரூபாயும், முதல் வகுப்பு சொகுசு பெட்டிக்கு ஆயிரத்து 940 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* இதை தவிர, உணவுடன் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்தால், 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கட்டணம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்