தமிழ்நாடு

போலி பி.எச்டி சான்றிதழ் கொடுத்து பணிபுரியும் ஆசிரியர்கள் - அண்ணா பல்கலை. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களில் 100-க்கும் மேற்பட்டோர் போலி பி.எச்டி பட்டங்களை சமர்பித்துள்ளது அண்ணா பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.

தந்தி டிவி
தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் சிலரின் பி.எச்டி சான்றிதழ்களை, அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வுசெய்தபோது, போலி என கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும், அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் கருணாமூர்த்தி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், 2020 - 21ஆம் கல்வியாண்டு இணைப்பு அங்கீகாரம் பெற, பொறியியல் கல்லூரிகள் அளித்துள்ள விவரங்களில், சில பேராசிரியா்களின் ஆதாா், நிரந்தர கணக்கு எண் விவரங்கள் தவறாக உள்ளதாகவும், மேலும், சில பேராசிரியா்கள், 2க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவது தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் 100-க்கும் மேற்பட்டோர் போலி பிஎச்.டி. பட்டங்களை சமா்ப்பித்து, பணியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள பதிவாளர், எனவே கல்லூரிகள், தங்களிடம் பணிபுரியும் பேராசிரியா்களின் பிஎச்.டி. பட்டம் குறித்து, சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்திடம் உண்மை தன்மை சான்றிதழை பெற்று, வரும்16-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்