தமிழ்நாடு

தேர்தல் பணியா, தேர்வு பணியா? - கடும் குழப்பத்தில் ஆசிரியர்கள்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் தேர்தல் பணியும் வருவதால் எதை பார்ப்பது என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
தமிழகத்தின் 28 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நாளை மறுநாள் தொடங்குகிறது. எஞ்சிய, ஒன்பது மாவட்டங்களின் வார்டு மறுவரையறை உள்ளிட்ட தேர்தல் பணிகள், அடுத்த மூன்று மாதங்களில் நடைபெற உள்ளது. அதேநேரத்தில் 10,11,12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு பணிகள் தொடங்குகிறது. தேர்தல் மற்றும் தேர்வு பணிகள் ஒரே சமயத்தில் வருவதால், மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். பயிற்சி என்ற பெயரில் நாட்களை வீணடிக்காமல் தேர்தல் நாளன்று மட்டும் ஆசிரியர்களை பயன்படுத்தும் வகையில் மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்