* அரசு பள்ளி, கல்லூரிகளிலே படித்து பட்டம் பெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன், வெறும் ஆசிரியராகத்தான் தனது பணியை தொடங்கினார். அதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு, அவரை சிறிது சிறிதாக உயர்த்தி, சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கும் அளவிற்கு கொண்டு சென்றது.
* 1952 முதல் 2 முறை குடியரசு துணைத் தலைவராக பணியாற்றிய பின், 1962 ஆம் ஆண்டில், குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* இத்தனை பெருமைகளை கொண்ட ராதாகிருஷ்ணன் பிறந்த ஊரான திருத்தணியை அடுத்த சர்வபள்ளி, வெங்கடாபுரம் பகுதியில், அவரது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
* திருத்தணியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் தங்கியிருந்த வீடு, நூலகமாகவும், கருணை இல்லமாகவும் மாறி நிற்கிறது. அவர் வாழ்ந்த தெருவிற்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை என பெயரிட்டு பெருமை படுத்திய தமிழக அரசு, 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி சிலையும் நிறுவியுள்ளது.
* 1954 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்துள்ளது. அங்குள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து வைத்திருக்கின்றனர்.