பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை துவங்கி இம்மாதம் இறுதி வரை நடைபெறுகிறது. அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது. இதற்காக, 688 பெயர் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதில், 550 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதேபோல நாளை மறுநாள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் 353 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ சார்பில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களும் புறக்கணிக்கப்படாமல், தகுதி வாய்ந்தவர்களை முன்னுரிமை பட்டியலில் சேர்த்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.