தமிழக அரசு நடத்தும், ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தேர்தலுக்காக அவசரம் அவசரமாக நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் தியாகராஜன், பணியிட மாறுதல் நடத்தப்படாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். முதலில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திய பின், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படுவதுதான் வழக்கம் என கூறியுள்ள தியாகராஜன், பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு அறிவிப்பு வெளியாகதது ஏன் என வினவியுள்ளார். பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த கல்வித்துறை முன்வர வேண்டும் என, தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.