தமிழ்நாடு

பட்டாசு தொழிலாளர்களின் பிள்ளைகளை சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்ற ஆசிரியர்

அரசு பள்ளியில் பயிலும் பட்டாசு தொழிலாளர்களின் பிள்ளைகளை தலைமை ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மங்கலம் கிராமத்தில் அரசுத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக ஜெயசந்திரன் உள்ளார் ...

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 64 மாணவ, மாணவிகள் மட்டுமே இங்கு பயின்று வந்தனர் . மாணவர் வருகையையும் , சேர்ப்பையும் அதிகரிக்க முடிவு செய்த அவர் , 5-ம் வகுப்பு மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் விமானத்தில் அழைத்து செல்வதாக கூறினார் .

இதனால் ஆர்வமுடன் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். மேலும் படிப்பிலும் கவனம் செலுத்த தொடங்கினர். இதனையடுத்து, 5 ஆம் வகுப்பில் படித்து வந்த 20 மாணவர்களையும், உடன் பணிபுரியும் 4 ஆசிரியர்களையும் தனது சொந்தச் செலவில் சென்னைக்கு இரண்டு நாள் ஜெயசந்திரன் சுற்றுலா அழைத்து சென்றார்

மாணவர்களின் கனவை நிறைவேற்ற தமக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும், இந்த நிகழ்வு தமக்கு மன நிறைவு தந்ததாகவும் கூறுகிறார் தலைமை ஆசிரியர் ​ஜெயசந்திரன்..

விமான பயணத்திற்கு பிறகு மற்ற மாணவர்களும் தற்போது கல்வி மீது கனவம் செலுத்தி வருவதாக தெரிவிக்கும் ஜெயசந்திரன், இந்த திட்டத்தை மற்ற மாணவர்களுக்கும் விரிவுப்படுத்த நினைப்பதாக தெரிவித்தார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு