தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் அடைப்பு ஒரேநாளில் 292 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் ஒரேநாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது.மே தினம் மற்றும் வாக்கு எண்ணிக்கை காரணமாக டாஸ்மாக் கடைகள் இரண்டு நாட்களுக்கு செயல்பாடாது என அறிவிக்கப்பட்டது.

தந்தி டிவி

டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் அடைப்பு ஒரேநாளில் 292 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் ஒரேநாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது.மே தினம் மற்றும் வாக்கு எண்ணிக்கை காரணமாக டாஸ்மாக் கடைகள் இரண்டு நாட்களுக்கு செயல்பாடாது என அறிவிக்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.இந்நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 63 கோடியே 44 லட்சம் ரூபாய்க்கும்,மதுரை மண்டலத்தில் 59 கோடியே 63 லட்ச ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 56 கோடியே 37 லட்ச ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருச்சி மண்டலத்தில் 56 கோடியே 72 லட்ச ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 55 கோடியே 93 லட்ச ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி