TASMAC | "டாஸ்மாக் கடை அத்தியாவசியமானதா? பொதுமக்கள் பாதிக்கப்படுவார்களா?" - கோர்ட் சரமாரி கேள்வி #tasmac #kanniyakumari #thanthitv குமரியில் உத்தரவை மீறி டாஸ்மாக் கடை திறப்பு - உயர்நீதிமன்றம் கேள்வி கன்னியாகுமரி மாவட்டம் படப்பாசை கிராமத்தில், வழக்கு நிலுவையில் இருக்கும்போதே புதிய டாஸ்மாக் கடையை அவசரமாகத் திறக்க வேண்டிய தேவை என்ன என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது... படப்பாசை கிராமத்தில் பொதுமக்களின் எதிர்ப்பால் ஏற்கெனவே மூடப்பட்ட கடையை மீண்டும் திறக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி கடை திறக்கப்பட்டதாகக் கூறி பிபின் என்பவர் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.... இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடை அத்தியாவசியமானதா, திறக்காவிட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்களா என்றும் கேள்வி எழுப்பினர்... மேலும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், மதுவிலக்குத்துறை உதவி ஆணையர், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.