நவம்பர் 1-ம் தேதி முதல், மதுக்கூடங்களை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மதுக்கூடங்களின் நுழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், கட்டாயம் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுக்கூடங்களுக்கும் வருபவர்களின் பெயர் மற்றும் தொலைப்பேசி எண் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும், பணியாளர்கள் கூடுதல் கையுறைகள் பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா பாதுக்காப்பு நெறிமுறைகள் பின்பற்றுவதோடு, 6 அடி சமூக இடைவெளி பின்பற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், உள் நுழையவும் வெளியேறவும் தனித்தனி வழியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுக்கூடங்களில் கூட்டம் கூடுவது தடுக்கப்பட வேண்டும் என்றும்,
55 வயதிற்கு மேல் உள்ள பணியாளர்களை பணி அமர்த்தக்கூடாது எனவும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது