தஞ்சை மாவட்டத்தில், கஜா புயல் தாக்குதலால் வீடுகளை இழந்த மக்கள் பலர், இன்றளவிலும் தார்ப்பாய்க்குள் தங்கும் நிலை உள்ளது. அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இன்னும் முழுமையாக வீடுகள் சரி செய்யாமல் உள்ளன. அவ்வபோது மழை பெய்வதால், ஒதுங்கக்கூட இடமில்லாமல், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக வீடுகளை கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.