தமிழ்நாடு

மின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் தங்கமணி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே இலந்தக்குட்டையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மின்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி பகுதிகளில் தடையின்றி சீரான மின் வினியோகத்திற்காக 17 ஆயிரம் மின் வினியோக பெட்டிகள் வாங்கப்படும் என்று கூறினார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்