தமிழ்நாடு

ஒலிம்பிக் போட்டியில் கலக்கும் தமிழர்கள் - இந்தியாவே எதிர்நோக்கும் தமிழக வீர‌ர்கள்

ஒலிம்பிக் தொடர் நெருங்கி கொண்டிருக்கும் தருணத்தில், ஒலிம்பிக் தொடர்பான சில முக்கிய தகவல்களை பார்த்து வருகிறோம்.

தந்தி டிவி

ஒலிம்பிக் தொடர் நெருங்கி கொண்டிருக்கும் தருணத்தில், ஒலிம்பிக் தொடர்பான சில முக்கிய தகவல்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில், நம் தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள கே.சி.கணபதி, வருண் தாக்கர் ஆகியோர் பற்றி பார்க்கலாம்....

பாய்மர படகு போட்டி... இந்த தடவ முதல் முறையா இந்தியால இருந்து மொத்தம் நாலு பேரு ஒலிம்பிக் பாய்மர படகு போட்டில கலந்துக்க போறாங்க... இதுவே ஒரு சாதனை தான்...

அதவிட முக்கியமான சாதனை , கலந்துக்குற நாலு பேருமே நம்ம தமிழகத்தை சேந்தவங்க தான்... இந்தியா சார்பா பாய்மர படகு போட்டிக்கு தேர்வாகியுள்ள முதல் பெண் வீராங்கணை நேத்ரா குமண‌ன், கே.சி.கணபதி மற்றும் வருண் தாக்கர்னு மூனு பேருமே சென்னைய சேர்ந்தவங்க... மற்றொரு வீர‌ரான விஷ்ணு மட்டும் மராட்டியத்துல வாழ்ந்துட்டு இருக்காரு... ஆனா அவரும் தமிழ் ரத்தம் தான்...

கே.சி கணபதி சின்னவயசுல கால்பந்து வீர‌ர் ஆகனும்னு நினைச்சிருக்காரு... அதுவும், ஜெர்மன் வீர‌ர் மைக்கல் பல்லாக்கோட தீவிர ரசிகராம்... ஆனா அப்றமா தான் தனக்குள்ள இருந்த திறமைய கண்டுபிடிச்சி மறுபடியும் பாய்மர படகு போட்டில கவனம் செலுத்திருக்காரு..

வருணோட அப்பா சென்னைல ஒரு ஷிப்பிங் ஏஜென்சி வச்சி இருக்காரு... அதனால அவருக்கும், பாய்மர படகு போட்டில நிறையவே ஆர்வமாம்.. அந்த ஆர்வத்தால, நிறைய தடவை வருண் தோத்தப்போ கூட உற்சாகப்படுத்தி இன்னைக்கி ஒலிம்பிக் வரைக்கும் கொண்டு போயிருக்காரு...

வருண், கணபதி ஜோடியோட பெரிய பலமே ... இவங்களோட ஒற்றுமைனு சொல்ல‌லாம்... ரெண்டு பேருமே சென்னைய சேர்ந்தவங்க... ரெண்டு பேருமே 7வது வயசுல இருந்தே பாய்மர படகு போட்டிக்கு தயாராகிட்டு வர்ராங்க...

அதாவது 2006 ல இருந்து இவங்களோட பாய்மர படகு போட்டி பயணம் தொடங்குது... ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டியா இருந்த நிலையில, 2011ல ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்துருக்காங்க... அவ்வளவு ஏங்க... படகு ஓட்டி பயிற்சி பன்றப்போ, ரெண்டே பேரும் சத்தமா பாட்டு பாடுவாங்கலாம்.. அது கூட இவர் மனசுல நினைச்ச பாட்ட அவரும், அவர் மனசுல நினைச்ச பாட்ட இவரும் பாடுவாங்கலாம்... அந்த அளவுக்கு இவங்கள வேவ்லென்த் இருக்குதாம்...

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்