தமிழ்நாடு

"மருத்துவ சேவையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது" - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேச்சு

மருத்துவ சேவை வழங்குவதில், நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 30-ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார், மருத்துவர்கள் கிராமப்புற சேவையில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அவர், மக்கள் தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மருத்துவக் கல்லூரி தொடங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மருத்துவ சேவை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்