தமிழ்நாடு

தமிழகத்தை Chill Vibe ஆக்கிய திடீர் மழை..காணாமல் போன தகிக்கும் வெயில்

தந்தி டிவி

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் அனல் பறக்கும் வெப்பம் வீசி வந்த நிலையில் கோடையைக் குளிர்விக்க ஆங்காங்கே மழை பெய்து வருகிறது...தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்க நல்லூர், கருங்குளம், நாட்டார்குளம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்தது... சுமார் அரை மணி நேரம் பெய்த மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. மழை இன்னும் பெய்யாதா என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர், பணகுடி, ராதாபுரம், நாங்குநேரி, களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், போன்ற பகுதிகளில் கோடை மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்