தமிழ்நாடு

தமிழகத்தில் களைகட்டிய மது விற்பனை - நேற்று ஒரே நாளில் ரூ.163 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை...

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 163 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையாகியுள்ளது.

தந்தி டிவி
உச்சநீதிமன்ற அனுமதியுடன் நேற்று, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. வண்ன டோக்கன்கள் வழங்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டதால் மது கிடைக்காமல் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். சென்னை காவல் எல்லை மற்றும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், சென்னை மண்டலத்தின் மற்ற டாஸ்மாக் கடைகளில் 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 44 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெர்றுள்ளது. சேலம் மண்டலத்தில் 41 கோடியே 7 லட்சம் ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 40 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 33 கோடியே 5 லட்சம் ரூபாய்க்கும் மதுப்பானம் விற்பனையாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்