தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ள நதிகள், ஆறுகளை இணைப்பது எப்போது?

தமிழகத்தில் நதிகள், ஆறுகளை இணைக்கும் திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவு நாட்கள் ஆகும்

தந்தி டிவி

கடலில் வீணாக கலக்கும் நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் போதிய தடுப்பணைகளை கட்ட உத்தரவிட வேண்டும் என தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தலைமை பொறியாளர் செல்வராஜ் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் உள்ள நதிகள், ஆறுகளை இணைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு திட்டங்கள் வகுத்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து தமிழகத்தில் நதிகள், ஆறுகள் இணைக்கும் திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவு நாட்கள் ஆகும் என அரசிடம் உரிய விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு அக்டோபர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்