தமிழ்நாடு

"மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்க டோக்கன் விநியோகம்"

ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பொருட்களை வாங்க அட்டைதாரர்களின் வீட்டுக்கே வந்து டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

ஊரடங்கு உத்தரவையடுத்து மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படுகிறது. ரேசன் பொருட்கள் சமூகவிலகலை பின்பற்றி பாதுகாப்பாக சென்றடைவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவரர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும்.

அதில் அத்தியாவசியப் பொருட்களை ரேசன் கடைகளில் பெறுவதற்கான நேரம் மற்றும் நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நாளில் ரேசன்கடைகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை விலையின்றி பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்