தமிழ்நாடு

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதலிடம்

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தந்தி டிவி

பள்ளிகளின் நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் இடைநிற்றல் ஆகிய தகவல்கள் குறித்து U.D.I.S.E. எனப்படும் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை, தேசிய அளவில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதன்படி, தேசிய அளவில் தொடக்கப்பள்ளி கல்வியை 100 மாணவ-மாணவிகளில் 94 பேரும், இடைநிலை பள்ளி கல்வியை 75 பேரும், மேல்நிலை பள்ளி கல்வியை 70 பேரும் நிறைவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய ரீதியாக எஸ்.டி. பிரிவினரில் 100 மாணவர்களில் 61 பேர் முழுமையாக பள்ளி படிப்பை நிறைவு செய்வதாகவும், எஸ்.சி. பிரிவினர் 65 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 73 பேரும், பொதுப்பிரிவினர் 74 பேரும் பள்ளிப்படிப்பை நிறைவு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆண், பெண் விகிதாச்சார அடிப்படையில் இருவருமே சமமாக 70 பேர் முழுமையாக பள்ளிப்படிப்பை முடிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மாநிலங்களின் அடிப்படையில் பள்ளி இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாகவும், தமிழகத்தில் 86 புள்ளி 2 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பை முழுவதுமாக நிறைவு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இமாசல பிரதேசம் 85 புள்ளி 8 சதவீதத்துடன் 2-வது இடத்தையும், கேரளா மற்றும் மகாராஷ்டிரா 85 புள்ளி 6 சதவீதத்துடன் 3-வது இடத்தையும் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு