தமிழ்நாடு

"விரைவில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம்" - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தகவல்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதன் மாநிலத் தலைவர் சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.

தந்தி டிவி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதன் மாநிலத் தலைவர் சுதாகரன் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர் ரங்கராஜன் , ஜேக்டோ ஜியோவில் மீண்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இணைந்து உள்ளதாக தெரிவித்தார். தற்போது இரண்டாக உள்ள ஜாக்டோ ஜியோவும் விரைவில் இணையப் போகிறது என்றும், இதற்கான ஒருங்கிணைப்பு கூட்டம் வரும் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகவும் ரங்கராஜன் கூறினார். அரசு ஊழியர்- ஆசிரியர்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை உடனே அரசு நிறைவேற்ற, விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்