தமிழ்நாடு

தமிழகத்துக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய நிதி என்னாச்சு ? - நாஞ்சில் சம்பத் சரமாரி கேள்வி

மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு வந்து சேரவேண்டிய 14 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து ஒ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் பேசாதது ஏன்? என நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பினார்.

தந்தி டிவி
மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு வந்து சேரவேண்டிய 14 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து ஒ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் பேசாதது ஏன்? என நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பினார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து அம்பத்தூர் பகுதியில் வாக்கு சேகரித்த அவர், 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர், தமிழக பிரச்சினைகளை பேசாமல், தி.மு.க.-வினர் புரொட்டோ கடையில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்க மாட்டார்கள் என பேசுகிறார். இதுதான் தேர்தல் பிரச்சாரமா? என விமர்சனம் செய்தார். வரவேண்டிய 5 ஆயிரம் கோடி வரவில்லை என்பதற்கு ஓபிஎஸ் பதில் சொல்ல வேண்டும் என்றும் நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டார். 95 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதால்தான், ஒரு கோடி இளைஞர்கள் சாலைப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என ஸ்டாலின் சொல்லியிருக்கிறார் என்றும் கூறினார்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு