மேற்குதொடர்ச்சி மலையில் வெளுத்து வாங்கும் மழையால் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த நான்கு தினங்களில் மட்டும் 11 புள்ளி ஆறு பூஜ்ஜியம் அடி அதிகரித்து 96 புள்ளி நான்கு பூஜ்ஜியம் அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர் கல்லணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் 14 ஆயிரத்து 784 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 105 அடியிலேயே நீடிப்பதால் அதிலிருந்து 11 ஆயிரத்து 900 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அதே நேரத்தில் பவானி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தொடர்கிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முழுக்கொள்ளளவான 57 அடியில் தற்போது மஞ்சளாறு அணை 52 புள்ளி எட்டு பூஜ்ஜியம் அடியாக இருக்கிறது.