பிரபாகரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. சட்டவிரோத பார்களை மூடுவது தொடர்பான சட்டத் திருத்தத்தை கொண்டு வர நீதிமன்றம் பரிந்துரைத்தும் இதுவரை அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் அபராதத்தை அதிகரிக்கும் சட்ட திட்டத்தை எப்போது அமல்படுத்துவீர்கள் என்றும் நீதிபதிகள் கேட்டனர். அப்போது சட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கை 2 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். .