தமிழ்நாடு

மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணங்கள் - அவசர சட்டத்தை பிரகடனம் செய்த தமிழக ஆளுனர்

மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணங்கள் செலுத்த வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரகடனம் செய்தார்.

தந்தி டிவி

மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணங்கள் செலுத்த வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரகடனம் செய்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வழக்குகளை தாக்கல் செய்பவர்களால் நீதிமன்ற கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணம் செலுத்த வகை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கருத்துரு அனுப்பியது. அதை பரிசீலித்த அரசு, மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணம் செலுத்த வகை செய்யும் வகையில் தமிழ்நாடு நீதிமன்ற கட்டண சட்டத்தில் திருத்தம் செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்தது. இதை ஏற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவசர சட்டத்தை பிரகடனம் செய்துள்ளார். இதன் மூலம், மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணங்களை செலுத்தலாம்.

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு